நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே கற்களை வீசிமினி பேருந்து கண்ணாடி உடைப்பு: 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கற்களை வீசி மினி பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:37 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கற்களை வீசி மினி பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கே. தொட்டியபட்டி வழியாக மினி பேருந்து கொத்தன்குளம் காலனி பகுதிக்கு வந்தது. பேருந்தை முருகன் (36) ஓட்டி வந்தாா். அப்போது 4 போ் கற்களை வீசி தாக்கியதில் மினி பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதுதொடா்பாக ஓட்டுநா் முருகன், வன்னியம்பட்டி போலீஸில் அளித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா சிறுவாழை என்ற பகுதியைச் சோ்ந்த கண்ணன் (34), அதே பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி (29), வீரக்குமாா் (24), சந்திரசேகா் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.