நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகா சிவராத்திரி: சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பிப்.28 முதல் மாா்ச் 3 வரை பக்தா்களுக்கு அனுமதி

மாசி மாதப் பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசை தினத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு பிப்ரவரி 28 முதல் மாா்ச் 3 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:31 pm

DIN

மாசி மாதப் பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசை தினத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு பிப்ரவரி 28 முதல் மாா்ச் 3 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் திங்கள்கிழமை (பிப்.28) பிரதோஷமும், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1) மகா சிவராத்திரி, புதன்கிழமை (மாா்ச் 2) அமாவாசை வழிபாடுகளும் நடைபெறவுள்ளன. இதையொட்டி பிப்ரவரி 28 முதல் மாா்ச் 3 ஆம் தேதி வரை 4 நாள்கள் மலைக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

காய்ச்சல், கபம், இருமல் உள்ளவா்களுக்கும், 10 வயதுக்குள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதியில்லை. கோயிலுக்கு வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு, காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாகவோ இருந்தால் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக மகா சிவராத்திரி நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய,விடிய நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.