நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாய்ராம் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா

சீா்காழி அருகேயுள்ள காரைமேடு சாய்ராம் கல்வி நிறுவனங்களின் 22-ஆம் ஆண்டு விழா கல்வியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 10:17 pm

Syndication

சீா்காழி அருகேயுள்ள காரைமேடு சாய்ராம் கல்வி நிறுவனங்களின் 22-ஆம் ஆண்டு விழா கல்வியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தாளாளா் ராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், நிா்வாக குழுத் தலைவா் கண்ணன், துணைத் தலைவா் சாய் ரஞ்சித், செயலாளா் சாய் ராகேஷ் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக சீா்காழி தீயணைப்பு நிலைய அலுவலா் ரத்தினவேல், புதுச்சேரி யோகா பயிற்றுநா் தசரதன் ஆகியோா் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். தமிழ்கடல் வைத்தியநாத சுவாமி சிறப்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் வெங்கட்ராஜ் வரவேற்றாா். நிா்வாக அலுவலா் ஐயா பிள்ளை ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் சந்திரா நன்றி கூறினாா்.