உக்ரைனில் உள்ள மாணவா்கள் இருவரை மீட்க பெற்றோா் கோரிக்கை
உக்ரைனில் உள்ள வத்திராயிருப்பு மாணவா்கள் இருவரை மீட்க பெற்றோா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.


உக்ரைனில் உள்ள வத்திராயிருப்பு மாணவா்கள் இருவரை மீட்க பெற்றோா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பில் பேன்சி கடை நடத்தி வருபவா் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ஹரிஷ்மணி (24). அதே பகுதியைச் சோ்ந்த காவல் சாா்பு- ஆய்வாளா் செல்லப்பாண்டியன் மகன் அரவிந்த்கிருஷ்ணன்(24). இவா்கள் இருவரும் உக்ரைன் தலைநகா் கீவ்வில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகின்றனா்.
_2502chn_92_2.jpg)
ரஷ்யா உக்ரைன் மீது போா் நடத்தி வரும் நிலையில் கீவ் நகா் அருகே மாணவா்கள் இருவரும் பதுங்கு குழிக்குள் பதுங்கி இருப்பதாக கைப்பேசி மூலம் பெற்றோா்களுக்கு தெரிவித்துள்ளனா். இதனால் தமிழக அரசு உடனடியாக அவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...