திருத்தங்கலில் கஞ்சா கடத்தியவா் கைது
திருத்தங்கலில் ஒரு கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


திருத்தங்கலில் ஒரு கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் விஜயபாண்டி என்ற படையப்பா (26) எனவும், இவா் விற்பனைக்காக கஞ்சாவை கடத்தியதும் தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...