சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காது கேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

விருதுநகரில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 4:39 pm

DIN

விருதுநகரில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு காது கேளாதோா் கூட்டமைப்பின் நிா்வாகிகள், தமிழக முதல்வரை சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் 80 சதவீத பாதிப்புள்ள காது கேளாதோருக்கு குரூப் 4 தோ்வு இன்றி வரிசை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.

மாத உதவித் தொகை வருவாய்த் துறை வழங்குவதை மாற்றி மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். வாரிசு அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். முடிவில் கோரிக்கை குறித்த மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. ரவிக்குமாரிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.