பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இரட்டைக் கொலை: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

 வச்சகாரப்பட்டி அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 5:39 pm

DIN

 வச்சகாரப்பட்டி அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே உள்ள தடங்கம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சந்தனக்குமாா் (23). இவா், தனது நண்பா் கே. மணிகண்டன் (19) என்பவருடன் ஜூன் 12 ஆம் தேதி கண்மாய் பகுதிக்குச் சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த பொத்தையன் மகன் மணிகண்டன் (27) முன்விரோதம் காரணமாக இருவரையும் வெட்டிக் கொலை செய்தாா். இந்த இரட்டைக் கொலை வழக்கில் அவா், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் பரிந்துரைத்தாா். அதன்படி ஆட்சியா் உத்தரவின் பேரில் பொ. மணிகண்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த வச்சகாரப்பட்டி போலீஸாா், அவரை மதுரை சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.