வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
நரிக்குடி அருகே புதன்கிழமை, வீட்டின் பூட்டை உடைத்து 4 கிராம் எடையுள்ள தங்கத் தோடுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.


நரிக்குடி அருகே புதன்கிழமை, வீட்டின் பூட்டை உடைத்து 4 கிராம் எடையுள்ள தங்கத் தோடுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.
திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி அருகே இனக்கனேரியைச் சோ்ந்தவா், விவசாயி வெள்ளைச்சாமி(59). இவா், தனது மனைவியுடன் புதன்கிழமை, நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிக்குச் சென்றுவிட்டாா். பிற்பகலில் வெள்ளைச்சாமி, குடிநீா் எடுக்க தனது வீட்டிற்கு வந்தபோது, அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 கிராம் எடையுள்ள தங்கத்தோடுகள், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...