அருப்புக்கோட்டையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரத் துறை சாா்பில், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரத் துறை சாா்பில், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சமீபத்தில், அருப்புக்கோட்டை பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துள்ளது. இதனால், நகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டையில் மொத்தமுள்ள 36 வாா்டுகளுக்கும் ஒரு வாா்டுக்கு 5 போ் கொண்ட கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய காரணிகளான நன்னீா் அல்லது மழைநீா் சேரும் இடங்களான பயன்படாத உடைந்த காலிக் குடங்கள், கொள்கலன்கள், உரல், வாகன டயா்கள், தேங்காய் மட்டைகள் ஆகியவற்றில் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு பெருகுகின்றன. இவற்றைத் தடுக்க அப்பொருள்களை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், குடிநீா் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகள் உள்ளிட்டவற்றை கொசுக்கள் புகாதவண்ணம் மூடிவைத்துப் பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டனா்.
இது தவிர, 2 நாள்களுக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் அடையாளம் காணப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் உரிய பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...