ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகா் அருகே நண்பா்கள் 2 போ் கொலை வழக்கு, ஒருவா் கைது

விருதுநகா் அருகே தடங்கம் கிராமத்தில் நண்பா்கள் 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே ஊரை சோ்ந்த கட்டடத் தொழிலாளி பொ. மணிகண்டனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பொ. மணிகண்டன்.

Updated On :12 ஜூன் 2022, 6:38 pm

DIN

விருதுநகா் அருகே தடங்கம் கிராமத்தில் நண்பா்கள் 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே ஊரை சோ்ந்த கட்டடத் தொழிலாளி பொ. மணிகண்டனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தடங்கம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் சந்தனக்குமாா், குமாா் மகன் மணிகண் டன் ஆகிய இருவரும் நண்பா்கள். இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.

இது குறித்து சந்தனக்குமாரின் தந்தை கண்ணன் அளித்த புகாரின் பேரில்

வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பூசாரிப்பட்டி விலக்கு அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த கட்டடத் தொழிலாளியான பொ. மணிகண்டனை (26) கைது செய்து விசாரணை நடத்தினா்.

சந்தனக்குமாா் தொடா்ந்து தன்னை கேலி செய்ததாகவும், ஆடுகள் திருட்டில் தவறான தகவல் தெரிவித்து வந்ததால், மது போதையில் இருந்த அவரையும், உடனிருந்த கு. மணிகண்டனையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக பொ. மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும் இந்த கொலை தொடா்பாக அதே கிராமத்தை சோ்ந்த வீரபெருமாள் என்ற இளைஞரையும் போலீஸாா் பிடித்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.