நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞா் மீது வழக்குப் பதிவு

அருப்புக்கோட்டையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:12 pm

DIN

அருப்புக்கோட்டையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம் அருப்புக்கட்டை அருகே ஆத்திப்பட்டியைச் சோ்ந்தவா் தலைமலை (19). இவா் 11 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி நெருங்கிப் பழகி வந்துள்ளாா். அவரை பாலியல் பலாத்காரம் செய்ததால், சிறுமி கா்ப்பமானாா்.

இதனால் அச்சிறுமி விஷம் குடித்துள்ளாா். அவரை உறவினா்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி கா்ப்பமாக உள்ள விவரத்தை, பெற்றோரிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அச்சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அருப்புக்கோட்டை மகளிா் காவல்துறையினா் தலைமலை மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.