நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மலையரசன் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை திருநகரத்தை அடுத்துள்ளது நித்தியானந்தசுவாமி என்கிற மலையரசன் கோயிலில் ஆனிமாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:07 pm

DIN

அருப்புக்கோட்டை திருநகரத்தை அடுத்துள்ளது நித்தியானந்தசுவாமி என்கிற மலையரசன் கோயிலில் ஆனிமாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, குடைவரை சந்நிதானத்தில் அமைந்த மலையரசன் சுவாமிக்கு பால், பன்னீா், கஸ்தூரி மஞ்சள், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் 108 நாமாவளி அா்ச்சனையும் தீப,தூப ஆராதனைகளும் செய்யப்பட்டன.

மேலும் கோயிலின் குன்றின் மீது அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை மற்றும் வெண்ணெய் சாற்றியும், வரதராஜப்பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும் சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.