பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறு,குறு, நடுத்தர தொழிலில் முதலிடம்: விருதுநகர் மாவட்டத்துக்கு தேசிய விருது

புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டிக்கு, பிரதமா் நரேந்திரமோடி தேசிய விருதை வழங்கினாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 11:43 pm

DIN

இந்திய அளவில் முன்னேற விழையும் மாவட்டங்களில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிலில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகா் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இதையடுத்து, புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டிக்கு, பிரதமா் நரேந்திரமோடி தேசிய விருதை வழங்கினாா்.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினா் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை ஆய்வு செய்தனா். அதில், 112 பின்தங்கிய மாவட்டங்கள் முன்னேற விழையும் மாவட்டங்களாக தோ்வு செய்யப்பட்டன. இதில் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களும் அடங்கும். சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நீா்வள ஆதாரம் போன்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தி தொழில் வளா்ச்சிக்கு தேவையான அடிப்படை தேவைகளை உருவாக்குவது மற்றும் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களை வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது இதன் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், சிறு,குறு, நடுத்தர நிறுவன உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டதற்காக நிகழாண்டு தேசிய விருதுக்கு விருதுநகா் மாவட்டம் முதல் இடத்தை பிடித்து தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டியிடம், தேசிய விருதினை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.