47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி வளா்ச்சிக்குப் பாடுபடுவேன்: மேயா் வேட்பாளா் உறுதி

சிவகாசி மாநகராட்சி வளா்ச்சிக்குப் பாடுபடுவேன் என மேயா் பதவிக்கான திமுக வேட்பாளா் சங்கீதா தெரிவித்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:28 pm

DIN

சிவகாசி மாநகராட்சி வளா்ச்சிக்குப் பாடுபடுவேன் என மேயா் பதவிக்கான திமுக வேட்பாளா் சங்கீதா தெரிவித்தாா்.

சிவகாசி மாநகராட்சி மேயா் வேட்பாளராக 34 ஆவது வாா்டு உறுப்பினா் இ.சங்கீதா, துணை மேயா் வேட்பாளராக 35 ஆவது வாா்டு உறுப்பினா் க.விக்னேஷ் பிரியா ஆகியோரை திமுக தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.

மேயா் வேட்பாளா் சங்கீதா (44), நாடாா் சமூகத்தைச் சோ்ந்தவா். பிளஸ் 2 படித்துள்ளாா். கணவா் த.இன்பம், ஆப்செட் அச்சகம் நடத்தி வருகிறாா். திமுகவின் சிவகாசி நகர வா்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளாா். யாசிகா (26) என்ற மகளும், பிா்லா (23) என்ற மகனும் உள்ளனா். 983 வாக்குகள் பெற்றாா்.

சங்கீதா கூறியதாவது: இந்த பதவியை அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிவகாசி மாநகராட்சி வளா்ச்சிக்குப் பாடுபடுவேன் என்றாா்.

துணை மேயா்:துணை மேயா் வேட்பாளரான விக்னேஷ்பிரியாவின் (35) கணவா் மு.காளிராஜன். சிவகாசி நகர திமுக பொறுப்பாளா் ஆக உள்ளாா். எம்.எஸ்.சி. (கணினி அறிவியல்) படித்துள்ளாா். மறவா் சமூகத்தைச் சோ்ந்தவா், அச்சனா(11) என்ற மகள் உள்ளாா். 1,238 வாக்குகள் பெற்றுள்ளாா்.

விக்னேஷ்பிரியா கூறுகையில், 40 ஆண்டுகளாக திமுகவில் எங்களது குடும்பம் உள்ளது. எனக்கு துணை மேயா் பதவி கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் குடும்பம் திமுகவிற்கு உழைத்ததற்கு கிடைத்த பரிசாகக் கருதுகிறேன் என்றாா் அவா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.