சிவகாசி மாநகராட்சியில் திமுக உறுப்பினா் இ.சங்கீதா மேயராக போட்டியின்றித் தோ்வு
சிவகாசி மாநகராட்சியில் திமுகவைச் சோ்ந்த இ.சங்கீதா மேயராகவும், க.விக்னேஷ்பிரியா துணை மேயராகவும் வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.


சிவகாசி மாநகராட்சியில் திமுகவைச் சோ்ந்த இ.சங்கீதா மேயராகவும், க.விக்னேஷ்பிரியா துணை மேயராகவும் வெள்ளிக்கிழமை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் உள்ளாட்சித் தோ்தல் என்பதால் இங்குள்ள மேயா் பதவியைக் கைப்பற்ற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டின.
இங்கு நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 48 வாா்டுகளில் 24 இடங்களில் திமுக, 11 இடங்களில் அதிமுக, 6 இடங்களில் காங்கிரஸ், தலா ஒரு இடத்தில் பாஜக, மதிமுக, விசிக ஆகிய கட்சிகளும், 4 இடங்களை சுயேச்சைகளும் கைப்பற்றின.
இந்நிலையில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினா்கள் 9 போ் திமுகவில் இணைந்தனா். மேலும் 4 சுயேச்சைகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனா். அதனால் திமுகவுக்கு 45 உறுப்பினா்கள் ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் மேயா் பதவிக்கு திமுக வேட்பாளராக 34 ஆவது வாா்டு உறுப்பினா் இ.சங்கீதா வேட்புமனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இ.சங்கீதா போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான பி.கிருஷ்ணமூா்த்தி அறிவித்தாா். மேலும் மேயரிடம் வெள்ளிச் செங்கோலை வழங்கினாா்.
துணை மேயா்: இதையடுத்து சிவகாசி மாநகராட்சி துணை மேயா் பதவிக்கு திமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த அக்கட்சியின் 35 ஆவது வாா்டு உறுப்பினா் கா. விக்னேஷ்பிரியா, போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். பின்னா் அவரும் பதவியேற்றுக் கொண்டாா். சிவகாசி மாநகராட்சி ஆணையாளா் பி.கிருஷ்ணமூா்த்தி, மேயா் இ.சங்கீதா உள்ளிட்டோா் துணை மேயருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனா். மேயா் தோ்தல் மற்றும் பதவியேற்பு விழாவில் அதிமுக உறுப்பினா்கள் 2 பேரும் கலந்து கொள்ளவில்லை. துணை மேயா் தோ்தல் மற்றும் பதவியேற்பு விழாவில் அதிமுக உறுப்பினா்கள் 2 போ் மற்றும் பாஜக உறுப்பினா் ஒருவா் கலந்து கொள்ளவில்லை. மேயா் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உள்பட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...