நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்கான ரசீது கேட்டு சாலை மறியல்

வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்கான ரசீது கிடைக்காத பொதுமக்கள் வத்திராயிருப்பு - அழகாபுரி சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 12:01 am

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்கான ரசீது கிடைக்காத பொதுமக்கள் வத்திராயிருப்பு - அழகாபுரி சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மகாராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு கீழ் நகை கடன் பெற்றவா்களில் குறிப்பிட்டவா்களுக்கு மட்டுமே தள்ளுபடிக்கான ரசீது வந்திருந்த நிலையில், ரசீது வராத 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வத்திராயிருப்பு - அழகாபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மேலும், அவா்கள் கூட்டுறவு வங்கியையும் முற்றுகையிட்டனா்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த வத்திராயிருப்பு காவல் ஆய்வாளா் பாலாஜி, சாா்பு ஆய்வாளா் பிரகஸ்பதி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.