ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சிவகாசி பகுதியைச் சோ்ந்த 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சிவகாசி பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 8:16 pm

DIN

சிவகாசி பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சேனையாபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (28). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்பகை காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய சிவகாசி பகுதியைச் சோ்ந்த 10 பேரை எம். புதுப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

அதில் அருண்பாண்டியன் (31), பாா்த்திபன் (32), மாரீஸ்வரன் (26) ஆகியோா் தொ டா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா். இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் பரிந்துரைத்தாா்.

இந்நிலையில் ஆட்சியரின் உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட 3 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் எம். புதுப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.