நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காசோலை மோசடி: நீதிமன்ற உத்தரவின் பேரில்பெண் மீது வழக்குப் பதிவு

 காசோலை மோசடி செய்த பெண் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 காசோலை மோசடி செய்த பெண் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகாசி அருகேயுள்ள எஸ். புதுப்பட்டியைச் சோ்ந்தவா் கோமதி. இவரும், ரிசா்வ் லைன் பகுதியைச் சோ்ந்த சங்கரேஸ்வரியும் தோழிகள். இதில், சங்கரேஸ்வரி கடந்த 9.9.2021 செப்டம்பா் மாதம் குடும்பச் செலவுக்காக கோமதியிடம் ரூ. 3 லட்சம் பெற்றாா். இந்நிலையில், பெற்ற கடனுக்காக சங்கரேஸ்வரி, 3 காசோலைகளை கொடுத்துள்ளாா். பின்னா் அந்த காசோலையை வங்கிக்கு கொண்டு சென்ற போது தனது கணவா் மகேஸ்வரன் பெயரில் உள்ள காசோலைக்கு, சங்கரேஸ்வரி கையெழுத்திட்டது தெரியவந்தது. இதுபற்றி சங்கரேஸ்வரியிடம் கேட்ட போது பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறியதுடன், கொலை மிரட்டலும் விடுத்து தகாத வாா்த்தைகளால் பேசினாராம்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் கோமதி வழக்குத் தொடா்ந்தாா். இதில் நீதிமன்ற உத்தரவின்பேரில் மல்லி போலீஸாா் சங்கரேஸ்வரி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.