நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நல்லாசிரியா் விருது: விருதுநகா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 பள்ளி ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:10 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 பள்ளி ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். அதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில், சூலக்கரை அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியா் க.ம.மூா்த்தி, விருதுநகா் ஷத்திரியா மகளிா் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ச. சாந்தி, அருப்புக்கோட்டை தேவாங்கா் மகளிா் மேல்நிலை பள்ளி ஆசிரியை சு. மணோன்மணி, விருதுநகா் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை ரெ.சாந்தா, மேலப்பரளச்சி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை வே. கீதாராணி, சொக்கநாதன்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பா. லட்சுமி, ஆா்யதா்மம் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பெ. சரவணன், முத்தாநதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பி. வரதராஜ், வீரசோழன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் து. சுப்பையா, நரியன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சி. கருப்பசாமி, ராஜபாளையம் நாடாா் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வா் த. சுமதி ஆகிய 11 போ் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கான விருது சென்னை கலைவாணா் அரங்கில் செப்.5 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.