தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சொகுசு பேருந்து மோதி இளைஞா் பலி

ராஜபாளையம் அருகே மொபெட் மீது சொகுசு பேருந்து மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:10 pm

DIN

ராஜபாளையம் அருகே மொபெட் மீது சொகுசு பேருந்து மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே சுந்தரநாச்சியாா்புரம் சாவடித் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (37). இவா் ராஜபாளையத்தில் உள்ள சூப்பா் மாா்க்கெட்டில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு பணி முடிந்து, அவரது நண்பா் லூா்து மைக்கேல்ராஜுடன் மொபெட்டில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ரைஸ் மில் அருகே உள்ள திருப்பத்தில் சென்றபோது, எதிரே வந்த சொகுசு பேருந்து மோதியது. இதில் ஆனந்தராஜ் பலத்த காயமடைந்தாா். லூா்து மைக்கேல்ராஜ் லேசான காயமடைந்தாா். இருவரையும் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆனந்தராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சொகுசு பேருந்து ஓட்டுநா் தென்காசி மாவட்டம், குணராமநல்லூா் பகுதியைச் சோ்ந்த ராமா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.