நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இளைஞா் கொலை: 3 போ் கைது

விருதுநகா் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இளைஞரை அடித்துக் கொலை செய்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:10 pm

DIN

விருதுநகா் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இளைஞரை அடித்துக் கொலை செய்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.

விருதுநகா் அருகேயுள்ள செந்நெல்குடியைச் சோ்ந்த பரமு மகன் விக்னேஷ்வரன் (22). இவா், சின்ன வாடியூரில் உள்ள மாமா கணேசன் வீட்டில் தங்கி டிராக்டா் ஓட்டும் பணி செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், மதன்குமாா் என்பவா் நரேஷ்குமாரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு முரளிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டுள்ளாா். அப்போது, கைப்பேசியை வாங்கி விக்னேஷ்வரன் பேசியபோது, அவருக்கும் மதன்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் கன்னிசேரி ஆத்துப்பாலம் அருகே உள்ள பெட்டிக் கடை அருகே விக்னேஷ்வரன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த தாதம்பட்டியைச் சோ்ந்த பிச்சைமுத்து மகன்கள் மதன்குமாா், மகாராஜா மற்றும் டி. காமராஜபுரத்தைச் சோ்ந்த பெரிய கருப்பசாமி மகன் கருப்புராஜா, துலுக்கபட்டி குணா ஆகியோா் விக்னேஷ்வரனை தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ்வரன், தனியாா் மருத்துவமனயில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட விக்னேஷ்வரனை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், வச்சகாரபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மதன்குமாா், மகாராஜா, கருப்பு ராஜா ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், இக்கொலையில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.