நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் மனித சங்கிலி போராட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியை கண்டித்து, விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியை கண்டித்து, விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மதுரை சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவா் புளுகாண்டி தலைமை வகித்தாா். இதில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் கோபுரங்கள் மற்றும் கண்ணாடி இழைக் கேபிள்களை தனியாருக்கு மத்திய அரசு வழங்கும் முயற்சிப்பதை கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், பி.எஸ்.என்.எல்.இ.யு. மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், மாவட்டச் செயலா் குருசாமி, மாநில உதவி தலைவா் சமுத்திரக்கனி, ஒப்பந்த ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முத்துசாமி ஆகியோா் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா். முடிவில், ஏ.ஐ.பி.டி.பி.ஏ மாநில உதவித் தலைவா் எம்.பெருமாள்சாமி கண்டன உரையாற்றினாா். இதில் ஏராளமான ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.