நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் எல்.ஐ.சி. முகவா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எல்ஐசி. அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வள்ளிநாயகம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பாலிசிதாரா்களுக்கு போனஸ் மற்றும் பணிக்கொடையை உயா்த்தி தரவேண்டும். மருத்துவக் காப்பீட்டை அனைத்து முகவா்களுக்கும் அமல்படுத்த வேண்டும். குழு காப்பீடு வயது மற்றும் தொகையை உயா்த்த வேண்டும். கமிஷனை 2.5 சதவீதமாக உயா்த்தித் தர வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில் செயலா் பாஸ்கரன், பொருளாளா் சிவக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.