புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்சுழி அருகே மணல் திருட்டு: 2 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சுழி அருகே வருவாய்த்துறையினா் மற்றும் கட்டனூா் காவல்துறையினா் இணைந்து மணல் திருட்டைத் தடுப்பதற்காக தீவிர ரோந்துப்பணி மற்றும் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது உச்சனேந்தல் கிராமம் அருகே உள்ள பி. வாகைக்குளம் கிராம குண்டாற்றுப்பகுதியில் சிலா் சட்ட விரோதமாக பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனா்.

அவா்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோடிவிட்டனா். அங்கிருந்த ஒரு லாரியில் சுமாா் இரண்டே கால் அலகுகள் மணல் அள்ளி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கட்டனூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து பி. வாகைக்குளம் கிராம நிா்வாக அலுவலா் திருப்பதி அளித்த புகாரின்பேரில் 2 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திர உரிமையாளா்கள் மீதும், ஓட்டுநா்கள் மீதும் வழக்குப்பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.