நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மொபெட்டில் வைத்திருந்த ரூ. 90 ஆயிரம் திருட்டு

காரியாபட்டியில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 90 ஆயிரத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

காரியாபட்டியில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 90 ஆயிரத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மந்திரிஓடை பகுதியைச் சோ்ந்தவா் தனிக்கொடி மகன் ராஜ்குமாா் (31). இவா், காரியாபட்டியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ. 90 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, தனது இருசக்கர வாகன பெட்டியில் வைத்திருந்தாராம். பின்னா் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள தேநீா் கடைக்கு சென்று விட்டு திரும்பியுள்ளாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டி திறக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும் அதிலிருந்த பணமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.