நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பழங்குடியினா் வனப்பகுதியில் குடியேறும் போராட்டம்

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி வனப்பகுதியில் குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி வனப்பகுதியில் குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பட்டுப்பூச்சி, ஜெயந்தி நகரில் 20-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில், இங்குள்ள சேதமடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும். அரசு வழங்கும் இலவச அரிசியை தங்கள் பகுதிக்கு வந்து வழங்க வேண்டும். பெண்களுக்கு சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும். பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்திற்காக வனப்பகுதியில் இருந்து தேன், இனாம் பட்டை உள்ளிட்ட 15 வகையான பொருள்களை சேகரித்து விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் வனத்துறையினா் கெடுபிடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பிளவக்கல் அணை கோவிலாறு வனப்பகுதியில் குழந்தைகளுடன் குடியேறி பழங்குடியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடா்ந்து வனப்பகுதியிலேயே தங்க இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.