ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வத்திராயிருப்பு: குடியிருப்பு, பள்ளி வளாக அருகில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

வத்திராயிருப்பு அருகே குடியிருப்பு மற்றும் பள்ளி வளாக அருகில் கிடந்த நாட்டு வெடி குண்டு மீது வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News image
தெற்கு கோட்டையூர் காலணி பகுதியில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு.
Updated On :23 ஜனவரி 2022, 1:45 pm

DIN

வத்திராயிருப்பு அருகே குடியிருப்பு மற்றும் பள்ளி வளாக அருகில் கிடந்த நாட்டு வெடி குண்டு மீது வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ளது தெற்கு கோட்டையூர் காலணி உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதி அருகே அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் மக்கள் நடமாட்டம் உள்ள தரிசு நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். 

அப்போது தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டரின் சக்கரம் ஏறியதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பெரும் சத்தம் கேட்டது. உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்திராயிருப்பு போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Story image

மேலும் வெடிகுண்டு வெடித்த இடத்தில் பார்வையிட்டபோது அதன் அருகிலேயே மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் கிடப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி ஆய்வு செய்து மேலும் ஏதேனும் குண்டு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த புதன்கிழமை வ.புதுப்பட்டி அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் 9 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

Story image

அதை சனிக்கிழமை செயலிழக்க செய்தனர். அதில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.