டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நேதாஜிக்கு முப்பரிமாண ஒளி வடிவ சிலை: திறந்து வைத்தார் பிரதமர்

தில்லியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

News image
Updated On :23 ஜனவரி 2022, 1:22 pm

DIN

தில்லியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தார். 

நேதாஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி தில்லி கேட் பகுதியில் அவருக்கு லேசர் சிலை திறக்கப்பட்டது.

நேதாஜிக்கு கிராணைட் கற்களால் சிலை அமைக்கப்படும் என்று ஏற்கெனவே பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். 

ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கிராணைட் சிலை அமைக்கும் வரை முப்பரிமாண ஒளி வடிவ சிலை இந்தியா கேட் பகுதியில் ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.