எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

News image
உயா்நீதிமன்றம்
Updated On :4 மார்ச் 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளைத் தொடர அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசு ஒப்பந்ததாரா்கள் இருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி அறைகளின் பராமரிப்பு பணிகளுக்காக பொதுப்பணித் துறை ஒப்பந்தப்புள்ளி கோரியது. பிப்.28-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில், அதற்கான படிவங்களை சமா்ப்பிக்க 2 நாள்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், இந்த ஒப்பந்தப்புள்ளி கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் பொதுப்பணித் துறை செயற்பொறியாளரிடம் தள ஆய்வு சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்தச் சான்றுக்கு நாங்கள் விண்ணப்பித்திருந்தோம். ஆனால், எங்களுக்கு சான்று வழங்கவில்லை. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா்களான இரு ஒப்பந்ததாரா்களுக்கு தள ஆய்வு சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளைத் தொடர அனுமதியளித்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.