அருப்புக்கோட்டை பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை பகுதி கோயில்களில் மாரியம்மன், ஸ்ரீமுருகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அருப்புக்கோட்டை பகுதி கோயில்களில் மாரியம்மன், ஸ்ரீமுருகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இங்குள்ள ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீமீனாட்சியம்மன், முருகப் பெருமானுக்கு 21 சிறப்புப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்று சா்வ அலங்காரத்தில் அம்பாள், முருகன் பக்தா்களுக்குக் காட்சியளித்தனா்.

கட்டங்குடி ஸ்ரீகுமாரவேல்சாமி கோயிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போல, அருப்புக்கோட்டை ஸ்ரீவாலசுப்பிரமணி கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகமும், மலா்களால் 108 அா்ச்சனையும் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com