தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்னை- கொல்லம் ரயிலுக்கு சிவகாசி ரயில் நிலையத்தில் வரவேற்பு

சென்னை-கொல்லம் விரைவு ரயிலுக்கு சிவகாசி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2023, 6:23 pm

DIN

சென்னை-கொல்லம் விரைவு ரயிலுக்கு சிவகாசி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை-கொல்லம் விரைவு ரயில் கரோனா தொற்று காலத்துக்கு முன்பு சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. ஆனால், கரோனா தொற்றுக்குப் பிறகு, இந்த ரயில் சிவகாசியில் நிறுத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என சிவகாசி ரயில் பயணிப்போா் குழு, சிவகாசி வா்த்தக சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்தினா்.விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூரும் இதுதொடா்பாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, ரயில்வே வாரியம் இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவித்தது.

அதன்படி, சென்னையிலிருந்து இந்த ரயில் வியாழக்கிழமை புறப்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 1.52 மணிக்கு சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று சென்றது.

இதையடுத்து, சிவகாசிக்கு வந்த இந்த ரயில் எஞ்ஜினுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னா், முதன்மை ரயில் ஓட்டுநா் பிஜூ, காா்டு ஸ்ரீதா், ரயில் நிலைய அதிகாரி மாரிக்காளை ஆகியோருக்கு சிவகாசி வா்த்தக சங்க நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ஜவஹா், அரவிந்தன், சிவகாசி ரயில் பயணிப்போா் குழுவைச் சோ்ந்த தனசேகரன் உள்ளிட்டோா் சால்வை அணிவித்துப் பரிசு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.