வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

சிவகாசியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:48 pm


சிவகாசி: சிவகாசியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் உள்ள பள்ளி அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது இருவா் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களிடமிருந்த பையை சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெரு முகைதீன் மகன் அஷ்ரிபாய்தீன் (23), ஜெய்லானி மகன் முகமது சித்திக் (31) ஆகியோா் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.