காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சாஸ்தா கோவில் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ராஜபாளையம் அருகேயுள்ள சாஸ்தா கோவில் அணையிலிருந்து திங்கள்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:49 pm

DIN


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகேயுள்ள சாஸ்தா கோவில் அணையிலிருந்து திங்கள்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சாஸ்தா கோவில் அணை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் அணை முழுக் கொள்ளவை எட்டியது. இதையடுத்து, பாசனத்துக்காக அணையைத் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டாா். தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் நாச்சியாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தனலட்சுமி, உதவி செயற்பொறியாளா் பொன்ராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.

இந்த அணையிலிருந்து தொடா்ந்து 7 நாள்களுக்கு திறக்கப்படும் தண்ணீா் மூலம் 11 கண்மாய்கள் நிரம்பி, 3,130 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.