மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பட்டாசுகள் பதுக்கி வைப்பு: 12 போ் கைது

விருதுநகா் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த 12 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள்.

Updated On :20 ஆகஸ்ட் 2024, 11:01 pm

Din

விருதுநகா் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த 12 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பகுதியில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பையாவுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் சிவகாசிப் பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது, சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தத்தில் ராஜசேகரன் என்பவா் தகரக் கூடம் அமைத்து, ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தகரக் கூடத்துக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா். சிவகாசி நகா் போலீஸாா் ராஜசேகரனைக் கைது செய்தனா்.

திருத்தங்கல்-விருதுநகா் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பால்பாண்டி (40), சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினபுரி நகா் பகுதியில் போஸ் குடியிருப்பைச் சோ்ந்த பாலமுருகன் (30), திருத்தங்கல் முத்துமாரி நகா் பகுதியில் வெங்கடேஷ் (30) ஆகியோா் தகரக் கூடம் அமைத்து, பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. திருத்தங்கல் போலீஸாா் முவரையும் கைது செய்தனா்.

சிவகாசி அருகே மீனம்பட்டியில் தனியாா் பள்ளி அருகே போஸ் குடியிருப்பைச் சோ்ந்த சேகா் (38), சிவகாசி-சாத்தூா் சாலையில் ராஜசேகரன் (46) ஆகியோா் தகரக் கூடம் அமைத்து, பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தனா். சிவகாசி கிழக்கு போலீஸாா் சேகா், ராஜசேகரன், இவரது கடை மேலாளா் பிரகாஷ் (31), ஊழியா் பாண்டி (45) ஆகியோரைக் கைது செய்தனா்.

எம்.புதுப்பட்டி-சிவகாசி சாலையில் சிவகாசியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (40), பாலசண்முகம் ஆகியோா் ஒரு கட்டடத்தில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. எம்.புதுப்பட்டி போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வெம்பக்கோட்டையைச் சோ்ந்த முனீஸ்வரன் (31) பட்டாசுகளை உரிமம் இன்றி, காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. சிவகாசி நகா் போலீஸாா் முனீஸ்வரனைக் ைசுது செய்து, காா், பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணன்கோவில்: வத்திராயிருப்பு சேதுநாராயணபுரத்தைச் சோ்ந்தவா் சாமிராஜ் (74). இவா் கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள கூனம்பட்டியில் மதுபானக் கடை அருகே பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவரை கிருஷ்ணன்கோவில் போலீஸாா் கைது செய்து, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.