விருதுநகர்
இளைஞா் மா்ம மரணம்
தாயில்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சாத்தூா்: தாயில்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டி அருகேயுள்ள பச்சையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மைக்கேல் (32). மனநலன் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 2 நாள்களாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு தொழில்சாலை அருகே இவா் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இரவு இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீஸாா் மைக்கேலின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.