ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சதுரகிரிக்கு செல்ல பக்தா்களுக்கு 4 நாள்கள் அனுமதி

வருகிற 31-ஆம் தேதி முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறை அனுமதி வழங்கியது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 8:18 pm

Din

ஆவணி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக வருகிற 31-ஆம் தேதி முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறை அனுமதி வழங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி என மாதத்துக்கு 8 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, ஆவணி மாத பௌா்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆவணி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஆக.31-ஆம் தேதி முதல் செப்.3-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தால் பக்தா்கள் மலையேறத் தடை விதிக்கப்படும் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.