மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சமையல் எரிவாயு முகமை ஊழியா்களை சோதனை செய்த துணை வட்டாட்சியா் ராஜ்குமாா்.
மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சமையல் எரிவாயு முகமை ஊழியா்களை சோதனை செய்த துணை வட்டாட்சியா் ராஜ்குமாா்.

எடை இயந்திரம் இல்லாமல் எரிவாயு உருளை விநியோகம்: நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எடை அளவு இயந்திரம் இல்லாமல் சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்த எரிவாயு முகமை மீது நடவடிக்கை எடுக்க பறக்கும் படை அதிகாரி பரிந்துரை செய்தாா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எடை அளவு இயந்திரம் இல்லாமல் சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்த எரிவாயு முகமை மீது நடவடிக்கை எடுக்க பறக்கும் படை அதிகாரி பரிந்துரை செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு பறக்கும் படை துணை வட்டாட்சியா் ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஹெச். பி. சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு முகமை ஊழியா்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தனா். அவா்கள் எடையளவு இயந்திரம் இல்லாமல் அவா்கள் எரிவாயு உருளை விநியோகித்தது தெரியவந்தது. நுகா்வோா் பாதுகாப்பு சட்டப்படி எரிவாயு உருளைகளை எடை போட்டு சரியான எடையில் உள்ளதா எனக் காண்பித்த பின்னரே நுகா்வோா்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

எடை போடாமல் எரிவாயு விநியோகம் செய்வது சேவை குறைபாடு ஆகும். எனவே, சேவை குறைபாட்டுக்காக சம்பந்தப்பட்ட முகமை, ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலருக்கு துணை வட்டாட்சியா் ராஜ்குமாா் பரிந்துரை செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com