பரமக்குடி பாலியல் வழக்கு: டிச.7-க்கு ஒத்திவைப்பு
பரமக்குடி பாலியல் வழக்கை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.


பரமக்குடி பாலியல் வழக்கை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, 5 மாதங்களில் தீா்ப்பு வழங்க உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
இதனடிப்படையில், கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட பரமக்குடி நகா்மன்ற உறுப்பினா் சிகாமணி, இடைத்தரகா்களான அன்னலட்சுமி உமா, கயல்விழி, மறத்தமிழா் சேனை நிறுவனா் புதுமலா் பிரபாகா், ஜவுளிக் கடை உரிமையாளா் ராஜா முகமது ஆகியோா் முன்னிலையாகினா். அப்போது, 5 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு சாட்சிகளிடம் நீதிபதி சுதாகா் வாக்குமூலம் பதிவு செய்தாா். மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...