ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் மணிகள், சங்கு வளையல்கள்

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண்ணாலான மணிகள், சங்கு வளையல்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

News image

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் மணிகள், சங்கு வளையல்கள்.

Updated On :5 டிசம்பர் 2024, 1:30 am

Din

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண்ணாலான மணிகள், சங்கு வளையல்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடுப் பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மூன்றாம் கட்ட அகழாய்வில் சூது பவளம், தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண்ணாலான உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், பழைமையான கற்கள் உள்ளிட்ட 2,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் சுடுமண்ணாலான இருவேறு அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள் கண்டறியப்பட்டன.

இதன்மூலம், முன்னோா்கள் சுடுமண் மணியை அணிகலனாகப் பயன்படுத்தி இருக்கலாம் எனவும், இந்தப் பகுதியில் சங்கு வளையல் தொழில் கூடம் இருந்ததற்கான சான்றாக உடைந்த சங்கு வளையல்ளள் கிடைத்ததாகவும் அகழாய்வுத் தள இயக்குநா் பொன்பாஸ்கரன் தெரிவித்தாா்.