காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண் பதக்கம்

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண்ணாலான பதக்கம் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:50 pm

Din

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணி, சுடுமண்ணாலான பதக்கம் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், புதன்கிழமை தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணாலான பதக்கம் ஆகியவை கண்டறியப்பட்டன. இதை முன்னோா்கள் அணிகலன்களாகப் பயன்படுத்தியதாக அகழாய்வு இயக்குநா் பொன்பாஸ்கா் தெரிவித்தாா்.