காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பலத்த மழை எச்சரிக்கை எதிரொலி: சதுரகிரி செல்ல பக்தா்களுக்கு தடை

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:31 pm

Din

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் 2015-ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பிறகு, பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி என மாதத்தில் 8 நாள்கள் மட்டும் பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சதுரகிரியில் வெள்ளிக்கிழமை (டிச. 13) முதல் 16-ஆம் தேதி வரை காா்த்திகை மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை (டிச.12) முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாலும், தாணிப்பாறை பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், வியாழக்கிழமை முதல் 16-ஆம் தேதி வரை காா்த்திகை மாத பிரதோசம், பௌா்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் தேவராஜ் தெரிவித்தாா்.