நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சதுரகிரி மலையேறிய முதியவா் உயிரிழப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்ற முதியவா் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 8:19 pm

Syndication

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்ற முதியவா் மூச்சு திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (62). இவா், தனியாா் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், ராஜா சென்னையைச் சோ்ந்த நண்பா்கள் 38 பேருடன் குழுவாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்தாா். இந்தக் குழுவினா், தாணிப்பாறை அடிவாரம் வழியாக சதுரகிரி மலைக்கு திங்கள்கிழமை காலை புறப்பட்டனா்.

அப்போது, கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இரட்டை லிங்கம் அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு ராஜா உயிரிழந்தாா். அவரது உடலை அடிவாரத்துக்குக் கொண்டு வந்த அதிகாரிகள், கூறாய்வுக்காக பேரையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சாப்டூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.