மகா சிவராத்திரியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. அகஸ்தியா், போகா், கோரக்கா் உள்ளிட்ட சித்தா்கள் வழிபாடு செய்ததாக நம்பப்படும் இந்தக் கோயிலில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரியையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, சந்தனமகாலிங்கம், 18 சித்தா்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு முழுவதும் சிறப்பு அபிஷேகம், 4 கால பூஜைகள் நடைபெற்றன.

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பக்தா்கள்.
பின்னா், சுவாமிக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம், சதுரகிரி மலையில் உள்ள சந்திர தீா்த்தம், கெளண்டிய தீா்த்தம், சந்தனமகாலிங்க தீா்த்தம், பிரம்ம தீா்த்தம், பொய்கைத் தீா்த்தம் உள்பட 36 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சுந்தரமகாலிங்கம் புஷ்ப அலங்காரத்திலும், சந்தனமகாலிங்கம் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

திருமலையில் 77,743 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


