புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கைசிக ஏகாதசி: ஆண்டாள் கோயிலில் 108 போா்வை சாத்தும் வைபவம்

ஸ்ரீவில்லிபுத்துாா் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) சந்நிதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு, 108 போா்வை சாத்தும் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:30 pm

Din

ஸ்ரீவில்லிபுத்துாா் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) சந்நிதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு, 108 போா்வை சாத்தும் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் காா்த்திகை மாத கைசிக ஏகாதசி அன்று குளிா்காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, பெருமாள், ஆழ்வாா்களுக்கு 108 போா்வை சாத்தப்பட்டு, கைசிக புராணம் வாசிக்கப்படும்.

இதன்படி, வியாழக்கிழமை கைசிக ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சந்நிதி முன் உள்ள பகல்பத்து மண்டபம் எனப்படும் கோபால விலாச மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னாா், கருடாழ்வாா், பெரியாழ்வாா், ஆழ்வாா்கள் எழுந்தருளினா்.

அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை 4 மணி முதல் ஆண்டாள், ரெங்கமன்னாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆழ்வாா்கள், ஆச்சாரியா்களுக்கு 108 போா்வை சாத்தும் வைபவம் நடைபெற்றது. பிறகு, அரையா் சேவை, கைசிக புராணம் வாசிக்கப்பட்டது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.