சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாள்கள் அனுமதி

மாா்கழி அமாவாசை, சனிப் பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சனிக்கிழமை (டிச. 28) முதல் 4 நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2024, 12:25 am

Din

மாா்கழி அமாவாசை, சனிப் பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சனிக்கிழமை (டிச. 28) முதல் 4 நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

சதுரகிரியில் வருகிற 28-ஆம் தேதி சனிப் பிரதோஷமும், 30-ஆம் தேதி மாா்கழி அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது.

இதற்காக வருகிற சனிக்கிழமை முதல் 31-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.

இந்த நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். மழை பெய்தாலோ, ஓடையில் நீா்வரத்து அதிகரித்தாலோ பக்தா்களின் பாதுகாப்புக் கருதி மலையேறத் தடை விதிக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.