எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தா்கள் திங்கள்கிழமை தரிசனம் செய்தனா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக திங்கள்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தா்கள் திங்கள்கிழமை தரிசனம் செய்தனா்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை முதலே ஆடிப்பூரக் கொட்டகை வரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவகாசி: சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், வெங்கடாஜலபதி கோயில், பத்திர காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் , கருநெல்லிநாதசுவாமி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சாத்தூா்: சாத்தூா் பத்திரகாளியம்மன் கோயில், காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், ஓடைப்பட்டி விநாயகா் கோயில்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.