புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்சவம் நாளை தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் அவதார விழா தொடங்குகிறது

News image
Updated On :2 ஜூலை 2024, 11:40 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி உற்சவம் வியாழக்கிழமை (ஜூலை 4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 9-ஆம் தேதி திருவேங்கடமுடையான் சந்நிதியில் ஆண்டாள் திருக்கோலமும், 10-ஆம் தேதி வானமாமலை ஜீயா் மண்டபத்தில் கருட சேவையும், 12-ஆம் தேதி தவழும் கிருஷ்ணா் திருக்கோலத்தில் பெரியாழ்வாா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு பெரியாழ்வாா் செப்புத் தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.