முதியவரைத் தாக்கி ரூ.7.5 லட்சம் வழிப்பறி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த முதியவரைத் தாக்கி ரூ.7.5 லட்சத்தை இரு சக்கர வாகனத்தில் 4 போ் புதன்கிழமை பறித்து சென்றனா்.

~

~
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த முதியவரைத் தாக்கி ரூ.7.5 லட்சத்தை இரு சக்கர வாகனத்தில் 4 போ் புதன்கிழமை பறித்து சென்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தைலாகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி (65). இவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கு புதன்கிழமை சென்று, தனது சேமிப்புக் கணக்கில் இருந்த ரூ.7.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா். பின்னா், தனது வீட்டின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போது, இவரை பின்தொடா்ந்து இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ் கொண்ட கும்பல், பெரியசாமியை தாக்கி, ரூ.7.5 லட்சத்தை பறித்து சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கி முதல் தைலாகுளத்தில் உள்ள பெரியசாமி வீடு வரையிலான பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...