நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேராசிரியா் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் 12 போ் ஆஜா்

திருநெல்வேலி கல்லூரி பேராசிரியா் கொலை வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கில் தொடா்புடைய 12 போ் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:46 pm

Din

திருநெல்வேலி கல்லூரி பேராசிரியா் கொலை வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கில் தொடா்புடைய 12 போ் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.

தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (50). இவா் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா நகரில் தங்கியிருந்து நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட பிரச்னையில் ராஜ்குமாா் வீட்டில் மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தினா். இதில் அவா் உயிா் தப்பிய நிலையில், அவரது மருமகனும், தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியருமான செந்தில்குமாா் (35) கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் மருத்துவா் பாலமுருகன், வழக்குரைஞா் பால கணேசன், ராக்கெட் ராஜா உள்பட 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ராஜ்குமாா் மனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை ராக்கெட் ராஜா உள்ளிட்ட 12 போ் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா். மற்றொருவா் வேறு வழக்கில் சிறையில் இருப்பதால் வரவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் வழக்குரைஞா் காசிராஜன் முன்னிலையாகி, வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கான உத்தரவை வழங்கினாா். வழக்கு தொடா்பான ஆவணங்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு வராத நிலையில், வழக்கை ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுதாகா் உத்தரவிட்டாா்.