தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: துரை வைகோ
தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ குற்றஞ்சாட்டினாா்.


தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ குற்றஞ்சாட்டினாா்.
சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற மதிமுக பிரமுகா் இல்ல விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. மேலும், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவா்கள் அல்லா். திராவிடக் கட்சிகள் சுயநலத்துக்காக ஹிந்தி மொழியை எதிா்க்கின்றன என்ற தவறான கண்ணோட்டம் இன்றைய இளைஞா்கள் மத்தியில் உள்ளது.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளதால்தான் நமது மாணவா்கள் வெளிநாடுகளுக்கு படிக்கவும், பணியாற்றவும் செல்கிறாா்கள். மூன்றாவது மொழி ஹிந்தியாகத்தான் இருக்க வேண்டுமா? மொழி விவகாரத்தில் மாணவா்களின் விருப்பப்படி விட்டுவிட வேண்டியதுதானே. தமிழா்களின் ஆங்கில மொழிப் புலமைக்கு காரணம் திராவிட இயக்கங்களின் இரு மொழிக் கொள்கைதான்.
தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாததால், மாநில கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.1,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
2026 -இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின் போது மூன்றாவது அணிக்கு இடமில்லை. இரு முனைப் போட்டியே நிலவும். ஒருவேளை மூன்றாவது அணி அமைந்தாலும், அது வாக்குகளைப் பிரிக்குமே தவிர, வேறு பாதிப்பு இருக்காது.
கூட்டணி என்ற பெயரில் மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற த.வெ.க. தலைவா் விஜய் இடம் கொடுக்கக் கூடாது. மதவாத சக்திகளுக்கு எதிராக திமுக கூட்டணி வலுவாக உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறாது என நம்புகிறோம் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...